search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தந்தை வாக்குமூலம்"

    மகள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் வரதட்சணை கேட்டு கேவலமாக பேசியதால் திமுக பிரமுகரை வெட்டிக் கொன்றதாக கைதான பெண்ணின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூர் கெலட்டிப்பேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் கிரிராஜன் (43). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தி.மு.க. பிரமுகரான இவர் சிறுகளத்தூர் ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினர் ஆவார்.

    நேற்று மதியம் நந்தம்பாக்கம் கருமாரி அம்மன்நகர் அருகே கிரிராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் கெலட்டிப்பேட்டையை சேர்ந்த பாபு, பழையநல்லூர் கவின்ராஜ், புதிய நல்லூர் கங்காதரன் மற்றும் சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் தவிர சரண், ரவி ஆகிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பாபு போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது மூத்த மகள் சவுபாக்கியவதிக்கு விருகம்பாக்கத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடித்தேன். அழைப்பிதழ் கொடுத்து திருமணம் நெருங்கிய நிலையில் காதல் என்ற பெயரில் கொலை செய்யப்பட்ட கிரிராஜனின் மைத்துனர் மோகன் என்பவர் எனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

    அதில் இருந்தே எனக்கும், என் மகளுக்கும் இடையே சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தேன். ஆனால் கிரிராஜன் என்னை பார்க்கும் போதெல்லாம் கேலி, கிண்டல் செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் என்னிடம் வந்து பெண்ணுக்கு தர வேண்டிய நகையை தரும்படி கேட்டார். நான் தரமறுத்து விட்டேன். எனவே என்னை கேவலமாக பேசினார். இதனால் எனது கோபம் அதிகமானது.

    எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டு வேறு ஒருவர் மூலம் அவரை வரவழைத்தேன். பின்னர் எனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தேன். என்னை கேவலமாக தகாத முறையில் பேசியதால் வாயில் அரிவாளால் வெட்டினேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#tamilnews
    நாசரேத்தில் மனவளர்ச்சி குன்றிய மகனை தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாசரேத்:

    நாசரேத் அருகே பாட்டக்கரை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 40) ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி சிவகனி. இவர் அங்கன்வாடி சமையலர். இவர்களுக்கு சத்யகோமதி (12), மீனாட்சி கீர்த்தனா (10) ஆகிய 2 மகள்கள் உள்ளனர். கச்சனாவிளையில் உள்ள பள்ளியில் சத்யகோமதி 7-ம் வகுப்பும், மீனாட்சி கீர்த்தனா 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்து படித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் முத்துக்குமார் நேற்று முன்தினம் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். அப்போது மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் அவருடைய 14 வயது மகன் ஹரி பிரசாத் கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தான்.

    நள்ளிரவில் மதுபோதையில் கட்டிலுக்கு முத்துக்குமார் தீ வைத்ததாகவும், பின்னர் போதையில் அந்த பகுதியிலேயே தூங்கியதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து கட்டிலில் படுத்து இருந்த ஹரி பிரசாத் அப்படியே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    இந்நிலையில் வெளியூர் சென்றிருந்த சிவகனி நேற்று காலையில் வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலுடன் தனது மகன் எரிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தகவல் அறிந்த நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடல் கருகி கிடந்த ஹரி பிரசாத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக நாசரேத் போலீசார் முத்துக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விபரம் வருமாறு:-

    ஹரி பிரசாத் சிறுவயதில் இருந்தே மூளை வளர்ச்சி குறைபாடு உடைய வாய் பேச முடியாது, காது கேட்காது. இதையடுத்து பல ஆண்டுகளாக அவன் கட்டிலில் படுத்தபடுக்கையாக உள்ளான். இதனால் அவன் படும் வேதனைகளை பார்க்க எனக்கு பரிதாபமாக இருந்தது. பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் குணமாகவில்லை. தொடர்ந்து மருத்துவம் பார்க்க என்னிடம் பணவசதி இல்லை. 

    இந்நிலையில் எனக்கும் எனது மனைவியின் அண்ணன் சாமுவேல் பட்டுராஜ் என்பவருக்கும் இடையே தோட்டம் வாங்கியது தொடர்பாக முன்விரோதம் உள்ளது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்படும். இதேபோல் நேற்று முன்தினமும் எனக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தியடைந்த நான் ஹரி பிரசாத்தை கொலை செய்துவிட்டு பலியை சாமுவேல் பட்டுராஜ் மீது போட்டு அவரை சிக்க வைக்க முடிவு செய்தேன். 

    இதை தொடர்ந்து எனது மகன் படுத்திருந்த கட்டிலுக்கு தீ வைத்தேன். வாய் பேச முடியாததால் அவனால் சத்தம்போடமுடிய வில்லை. இதையடுத்து தீயில் கருகி அவன் இறந்தான். உடனடியாக நான் அங்கிருந்து தப்பியோடிவிட்டேன். ஆனால் இடையன்விளை ரெயில்வே கேட் அருகே நின்றபோது போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

    தந்தையே மனவளர்ச்சி குன்றிய மகனை எரித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×